ஆந்திர அமைச்சருக்கு நக்சல்கள் கொலை மிரட்டல்
ஹைதராபாத்: கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளதாக கூறப்படும் ஆந்திர அமைச்சர் பில்லி சுபாஷ் சந்திரபோஸைத் தீர்த்துக் கட்டப் போவதாக நக்சலைட்டுகள் மிரட்டியுள்ளனர்.
பில்லி சுபாஷ்சந்திரபோஸ் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையறிந்த மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அவருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்
இது தொடர்பாக அவர்கள் ராஜமுந்திரி அருகே மரேடுபில்லி என்ற இடத்தில் ஏராளமான துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு சென்றனர்.
அதில், பில்லி சுபாஷ்சந்திரபோஸ் ஏழைகளின் நலத்திட்டங்களில் ஊழல் செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொகுசு ஆடம்பர காரில் பவனி வரும் அவரை விரைவில் மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்வோம். இதை யாராலும் தடுக்க முடியாது.
ஊழல் தலைவர்கள் சட்டத்தில் இருந்து வேண்டுமானால் தப்பி விடலாம். ஆனால் எங்களிடம் இருந்து தப்பவே முடியாது.
பில்லி சுபாஷ் சந்திரபோசை எப்படி சுட்டுக்கொல்வது என்று நாங்கள் பலமுறை ஒத்திகை பார்த்து விட்டோம். அவருக்கு நாங்கள் கொடுக்கும் தண்டனை இந்திய அரசியல் தலைவர்களுக்கு நல்ல பாடமாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என அவரை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications