டிடிவி தினகரன் மீதான கிரிமினல் வழக்கு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அதிமுக எம்.பி. டிடிவி தினகரன் மீது அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கை எழும்பூர் கோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது.

டி.டி.வி. தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தினகரன் எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்புக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ரூ. 28 கோடிக்கு வட்டியாக மேலும் ரூ. 3 கோடியை தினகரன் செலுத்த வேண்டும் என இந்த கோர்ட்டில் அமலாக்கப் பிரிவு மனு செய்தது.

இந்த பணத்தை கட்டாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று இன்னொரு மனுவும் தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அமலாக்கப் பிரிவு போதுமான ஆதாரத்தை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+