ராஜபக்சேவுக்கு பட்டாபிஷேகமா? வைகோ பாய்ச்சல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மதிமுக. பொதுக்கூட்டம் நடைபெற்றது. மழை பெய்த நிலையிலும் கூட்டம் தொடர்ந்தது. அதில் வைகோ பேசுகையில்,
கொட்டும் மழையில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மதிமுக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகும். இயக்கத்தின் எழுச்சி பயணம் நடைபெற்றபோதும், கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற நதிநீர் இணைப்பு விழிப்புணர்வு பிரசாரத்தின் போதும் இதுபோன்ற அனுபவத்தை கண்டோம்.
ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தான் அண்ணா முதன் முதலில் திமுகவை தொடங்கினார். தமிழர்களின் வாழ்வு தழைக்க ஜாதி பேதமற்ற சமுதாயம் தழைத்தோங்க அன்று அண்ணாவால் திமுக தொடங்கப்பட்டது.
மதிமுகவும் நெருப்பை தாண்டிய இயக்கம் தான். நம் மீது கொலைப்பழி சுமத்தப்பட்ட போது 5 பேர் தீக்குளித்தனர். அந்த தியாக நெருப்பில் வளர்ந்தது தான் மதிமுக.
தமிழகத்தில் விவசாயிகளின் எதிர்காலம் பாழாய்ப்போகும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு ஆகிய பிரச்சினைகளில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டது தான்.
ஈழத்தில் தமிழ் இனம் கொன்று குவிக்கப்பட்டது. ராஜபக்சேவின் கொலை வெறித்தாண்டவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களையும், நிதியும் கொடுத்து உதவியது.
ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதியில் பட்டாபிஷேகம் செய்துள்ளது மன்மோகன் அரசு. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருந்துள்ளார். இதை எதிர்கால தமிழகம் மன்னிக்காது என்றார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications