பன்றிக்காய்ச்சல் பயத்தால் சுற்றுலாத் துறை பாதிப்பு
டெல்லி: பன்றிக்காய்ச்சல் பயம் காரணமாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா கூறுகையில், 'வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சமீபத்தில் குறைந்திருப்பதற்கு பன்றிக் காய்ச்சல் அச்சம் காரணமாக இருக்கும் என தெரிகிறது. எனினும் இந்த சமயங்களில் நமது அன்னியச் செலாவணி வருவாயில் இறங்குமுகம் இல்லை' என்றார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 493. கடந்தாண்டு இதே மாதத்தில், 4 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேர் வந்தனர்.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 40 லட்சத்து 23 ஆயிரத்து 88 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கடந்தாண்டில் இந்த எண்ணக்கை 43 லட்சத்து 23 ஆயிரத்து 729ஆக இருந்தது.
ஆனால், இதற்கு மாறாக அன்னியச் செலாவணி வருவாயில் ஏறுமுகம் காணப்படுகிறது. இந்தாண்டு அக்டோபர் மாதம் அன்னியச் செலாவணி வருவாய் ரூ.4,806 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு, ரூ.4, 248 கோடியாக இருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications