பன்றிக் காய்ச்சலுக்கு கோவையில் முதல் பலி - கர்ப்பிணி பரிதாப மரணம்
கோவை: கோவையில் முதல் பன்றிக் காய்ச்சல் பலி ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார்.
தமிழத்திலேயே கோவையில்தான் பெருமளவிலானோர் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் 6 மாதங்களில் பன்றி காய்ச்சலுக்கு 435 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தற்போது 13 பேர் அனுமதிக்கப்பட்டு பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 6 பேர் மாணவ-மாணவிகள்.
இந்த நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த கென்னடி ராஜூ என்பவரின் மனைவி சரண்யா (22) 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். சரண்யாவுக்கு திடீரென்று தொண்டை வலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி முதல் 2-ம் தேதி வரை புறநோயாளியாக சரண்யா சிகிச்சை பெற்றார். இருந்தாலும் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 3-ந்தேதி சரண்யா அனுமதிக்கப்பட்டார். சரண்யாவின் ரத்தம், பரிசோதனைக்காக கோவையில் உள்ள தனியார் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரத்தப் பரிசோதனையில் சரண்யாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சரண்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
கர்ப்பிணியாக இருந்ததால் குழந்தையையும், தாயையும் காப்பாற்றுவதற்காக சரண்யாவின் வயிற்றில் உள்ள குழந்தையை வெளியே எடுக்க டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால் நேற்று காலை சரண்யாவுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சரண்யா நேற்று காலை 9 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.
கோவையில் ஏற்பட்டுள்ள முதல் பன்றிக் காய்ச்சல் பலி இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications