பெரம்பலூரில் மர்ம காய்ச்சல்: நர்சிங் மாணவி பலி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூரில் மர்மக் காய்ச்சலுக்கு நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டைச் சேர்ந்தவர் கவுதமி. இவர் பெரம்பலூரில் உள்ள ஹான்ஸ் ரோவர் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவருக்கு கடந்த 2ம் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அன்றைய தினமே கவுதமி விடுதிக்கு திரும்பியுள்ளார்.
எனினும் அவருக்கு கடுமையான காய்ச்சல் தொடர்ந்துள்ளது.
காய்ச்சலுடன் உடல்வலி, வாந்தி, கைகால் வலி என அவதிப்பட்டார். இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
அப்போது சிகிச்சை பலனின்றி கவுதமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications