சென்னை ஹைகோர்ட்-14 நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 14 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 54 இடங்களில் நீதிபதிகள் உள்ளனர். இதில் 26 பேர் நிரந்தர நீதிபதிகள் ஆவார்கள்.
கூடுதல் நீதிபதிகளாக இருந்த கே.சந்துரு, வி.ராமசுப்பிரமணியம், எஸ்.மணிக்குமார், ஏ.செல்வம், பி.ஆர்.சிவக்குமார், ஜி.ராஜசூர்யா, டி.சுதந்திரம், எஸ்.நாகமுத்து, எஸ்.பழனிவேல், கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், வி.பெரியகருப்பையா, ஆர். சுப்பையா, எம்.சத்யநாராயணன் ஆகிய 14 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இவர்கள் நிரந்தர நீதிபதிகளாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி கோகலே, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பதவியேற்ற நீதிபதி கே.சந்துரு தனது சொத்து விவரத்தை உடனடியாக தலைமை நீதிபதியிடம் சமர்பித்தார். மற்ற நீதிபதிகளும் அடுத்த வாரத்தில் சொத்து விவரத்தை வெளியிடவுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications