நவ. 12ல் ஐ.நா. சிறுபான்மையினர் மாநாட்டில் பேசுகிறார் திருமாவளவன்!
சென்னை: ஜெனீவாவில் நவம்பர் 11 முதல் 13 வரை நடக்கும் ஐநா சிறுபான்மையினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பைப் பெற்றுள்ள ஒரே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தான் மட்டுமே என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது:
"சிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப்பும்" என்கிற பொருளில் நடைபெறுகின்ற இந்தக் கருத்தரங்கில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
சிறுபான்மையினரக் விவகாரங்களுக்கான சுயாதீன நிபுணர் என்ற பொறுப்பில் உள்ள மெக்டோனால்ட் அவர்களின் தனிப்பட்ட அழைப்பு இது. அந்த அழைப்பை ஏற்று அந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 12ம் தேதி பிற்பகல் அமர்வில் பேசிவதற்கேன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தலித் மக்களுடைய பிரச்சனைகளை மையப்படுத்தி அதன் தொடர்பான கருத்துக்களை எடுத்துச்சொல்லவும், மத அடிப்படையிலும் மொழி அடிப்படையிலுமான சிறுபான்மை மக்களின் சிக்கல்கள் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பாக கருதுகிறேன். இந்தியாவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அந்தப் பெருமை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications