கொடைக்கானலில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர் மழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று அதிக அளவாக 19 செமீ மழை பெய்தது.
மழை காரணமாக கொடைக்கானல் ஏரி, குடிநீர் வழங்கும் இரண்டு ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ளம் பர்ன்ஹில் ரோட்டில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
கனமழை காரணமாக கொடைக்கானல் -வத்தலக்குண்டு சாலையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணிக்கு சாலை சீரானது.
இந்த நிலச்சரிவால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு இடையே சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல், பெரும்பாறை, தாண்டிக்குடி, தர்மத்துபட்டி -ஆடலூர், சிறுமலைக்காட்டு சாலைப் பகுதி உள்ளிட்ட மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications