தமிழகத்தில் ரூ.800 கோடியில் பயோமாஸ் மின்சக்தி திட்டங்கள்

கடந்த 18 மாதங்களாக தமிழகத்தில் பயோமாஸ் திட்டம் துவங்க ஒருவரும் முன்வரவில்லை. ஆனால் மின்சார கொள்முதல் விலையை தமிழக அரசு யூனிட்டுக்கு ரூ.4.50 ஆக உயர்த்தியதும், பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பயோமாஸ் மின்சக்தி நிலையங்களை துவங்கி காத்திருப்பதாகவும் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 800 கோடி என்றும் தமிழ்நாடு சக்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணை பொதுமேலாளர் முரளிதரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பயோமாஸ் மூலம் 500 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இதில் 200 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் முதன்மைச் செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்துள்ளார்.
புதிதாக பயோமாஸ் திட்டங்களைத் துவங்க இதுவரை 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளனவாம்.
இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் காஞ்சிபுரம், சிவகாசி, புதுக்கோட்டா, திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் மற்றும் திருவள்ளூர் நகரங்களில் 12 பயோமாஸ் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கிறிஸ்துதாஸ் காந்தி கூறினார்.
இவை தவிர, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் இரு திட்டங்கள் முடிவுறும் தறுவாயில் உள்ளனஎன்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பயோமாஸ் மின் உற்பத்தி நிலையம் மூலமும் 2000 குடும்பங்களுக்கு மேல் வேலைவாய்ப்பு பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications