திருப்பூரில் ஸ்கிரீன் பிரின்டிங் குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்
திருப்பூர்: ஐரோப்பிய நாடுகளின் ஸ்கிரீன் பிரின்டர்ஸ் சங்கங்களின் சம்மேளனம் (FESPA) சார்பில், ஸ்கிரீன் பிரின்டிங் குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெறுகிறது.
மேலும், ஃபெஸ்பாவின் சார்பில், டெல்லியில் ஃபெஸ்பா இந்தியா எக்ஸ்போ 2009 என்ற பொருட்காட்சியும், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சம் குறித்து, திருப்பூர் பிரின்டிங் துறைக்கு விளக்க, எதிர்காலமும் புதிய தொழில்நுட்பங்களும் என்ற கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் டெக்மா தலைவர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஸ்கிரீன் பிரின்டர்கள், மெஷின், இங்க், சாயங்கள் தயாரிப்பாளர்கள் இணைந்துள்ள மிகப் பெரிய சங்கம் ஃபெஸ்பா.
இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை "ஃபெஸ்பா எக்ஸ்போ' என்ற பொருட்காட்சியை, ஜரோப்பிய நாடுகளில் சிறப்புடன் நடத்தி வருகிறது.
இதன் மூலம் அவ்வப்போது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளால், பிரின்டிங் துறையில் உருவாகி வரும் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு, இந்தியாவில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
"ஃபெஸ்பா இந்தியா எக்ஸ்போ 2009' என்ற பெயரில், டெல்லியில் டிசம்பர் மாதம் 7, 8, 9 ம் தேதிகளில் நடைபெறும் .
இந்த கண்காட்சியில் பங்கேற்கும் உலகப் புகழ் பெற்ற நாடுகள் மற்றும் நிறுவனங்களை பற்றி கூறவும், எதிர்காலமும் நவீன தொழில்நுட்பங்களும் பற்றி விளக்கவும், திருப்பூர் இடுவம்பாளையத்தில் உள்ள டெக்மா கலையரங்கத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு விளக்க கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதில், நவீன கண்டுபிடிப்புகளும், அவற்றை கையாளும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஸ்கிரீன் பிரின்டிங் தரத்தை, உலகத்தரத்துக்கு உயர்த்த இந்த கருத்தரங்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications