ஆரியங்காவில் மண் சரிவு: கொல்லம் சாலை சேதம்
தென்மலை: கேரள மாநிலம் ஆரியங்காவில் மண் சரிவு ஏற்பட்டதால் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. மலை பகுதிகளில் ஆங்கங்கே மண் சரிவு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா மாநிலம் ஆரியங்காவு உள்ளது.
இவ்வழியாக கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கன மழை காரணமாக ஆரியங்காவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு சேதம் ஏற்பட்டது. அருகே தென்மலை ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
சாலையில் செல்லும் வாகனங்களை ஓட்டி செல்பவர்களின் கவனம் சிறிது குறைந்தாலும் இப்பகுதியில் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஊர்ந்தப்படி செல்கின்றன.
ஆரியங்காவை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் கன மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன. இவற்றில் வசிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
மேலும் தென்மலை நீர்த்தேக்கத்திற்கு காட்டாற்று வெள்ளம் வருவதால் அணை திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து சுமார் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அப்பகுதி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை சேதம் ஊட்டி, குன்னுரில் ஏற்பட்டதை போல் கேரள எல்லையிலும் ஏற்பட்டுள்ளது. இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications