வெடிகுண்டு பதுக்கிய வழக்கு-10 அல் உம்மாவினர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 அல் உம்மா அமைப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, அரசு மருத்துவமனை எதிரே உள்ள கிளாசிக் டவர் பகுதியில், நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கடந்த 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கோவை தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கணேசன் தற்போது தீர்ப்பளித்துள்ளார்.

இதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இந்த பத்து பேரும் ஏற்கனவே தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர் என்பதால் இவர்களால் விடுதலையாகி வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+