காஞ்சிபுரத்தில் எல் அண்ட் டியின் டவர் டெஸ்டிங் மையம்!

ரூ 25 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த டவர் டெஸ்டிங் வசதிதான் இந்தியாவிலேயே முதன்மையானது. வணிக ரீதியாக பிற மின் உற்பத்தி நிறுவனங்களின் தேவைகளையும் இதன் மூலம் பூர்த்தி செய்கிறது எல் அண்ட் டி.
"இந்த டவர் டெஸ்டிங் வசதி மூலம், மேலும் பல மின் திட்டங்களை விரைவுபடுத்த முடியும். இன்றைக்கு டவர் டெஸ்டிங்குக்காக 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எல் அண்ட் டியின் இந்த வசதி மூலம் இந்த காத்திருப்பு நேரத்தை 3 அல்லது 4 மாதங்களாகக் குறைக்க முடியும்..." என்கிறார் இந்நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு தலைவர் கே வி ரங்கசாமி.
இந்த வசதியை ஆரம்பித்த கையோடு எல் அண்ட் டிக்கு மாநில அரசு மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களின் ஆர்டர்கள் குவிந்துவிட்டதாம்.
வரும் ஏப்ரல், 2010 வரை ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த காலகட்டத்துக்குப் பிறகும் வந்த ஆர்டர்களை தாங்கள் நிறுத்தி வைத்திருப்பதாகவும், எல் அண் டி யின் பொதுமேலாளர் கூறினார்.
தற்போது மகாராஷ்ட்ர மாநில அரசின் 220 கிலோ வாட் மின்சார டவர்கள் மற்றும் தமிழக அரசின் 440 கிலோ வோல்ட் திறன் கொண்ட டவர்களை சோதிக்கும் ஒப்பந்தம் எல் அண்ட் டிக்கு தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications