கர்நாடக சபாநாயகர் ராஜினாமா-அமைச்சராகிறார்
ஹூப்ளி: ரெட்டி சகோதரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்பாட்டின்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் அமைச்சராக பதவியேற்வுள்ளார். இதற்கு வசதியாக வரும் 16ம் தேதி தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.
சமீபத்தில் ரெட்டி சகோதரர்கள் ரூபத்தில் வீசிய புயலை சாதுரியமாக சமாளித்து தனது பதவியை காப்பாற்றிக் கொண்டார் முதல்வர் எதியூரப்பா. இதுதொடர்பாக எதியூரப்பாவுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும், டெல்லியில் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான ஷோபா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். தற்போது சபாநாயகர் ஷெட்டார் அமைச்சராக்கப்படவுள்ளார். இதற்கு வசதியாக 16ம் தேதி தனது பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.
இதுகுறித்து ஷெட்டார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நவம்பர் 16ம் தேதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்கிறேன். 17 அல்லது 18ம் தேதி அமைச்சராரகப் பதவியேற்பேன் என்றார்.
பிரச்சினை வெடித்தவுடனேயே ஷெட்டாரை அமைச்சராக்குவதாக எதியூரப்பா அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் ஷெட்டார். இந்த நிலையில் டெல்லியில் நடந்த பேச்சுக்களின் தொடர்ச்சியாக அமைச்சர் பதவியேற்குமாறு கட்சி மேலிடம் உத்தரவிட, தற்போது அதை ஏற்றுக் கொண்டுள்ளாராம் ஷெட்டார்.
மேலும், எதியூரப்பாவை நீக்க வேண்டும். அவரது இடத்திற்கு ஷெட்டாரைக் கொண்டு வர வேண்டும் என முன்னதாக கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர் ரெட்டி சகோதரர்கள். ஆனால் அதை கட்சி மேலிடம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications