விசாரணைக்கு காவல் நிலையம் சென்றவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் கோம்பையில் திருட்டு சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் விஷம் குடித்து இறந்தார்.

தேனி மாவட்டம், கோம்பை, சிங்காரநகரை சேர்ந்தவர் கமலகண்ணன் (40). இவர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வங்கிக்கு சென்று விட்டு திரும்பியபோது வீடு திறந்திருப்பதை கண்டார். பீரோ உடைக்கபட்டிருந்தது. யாரோ ஓருவர் வீட்டிற்குள் போர்வையால் போர்த்தி அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்குள் இருந்த நபரை பிடித்து கோம்பை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் டி.மீனாட்சிபுரம் பெருமாள் மகன் கோவிந்தராஜ்(26) என்பது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை நடைபெற்ற சில மணி நேரங்களில் கோவிந்தராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

உடனடியாக அவரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிசைச்சாக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோவிந்தராஜ் இறந்தார்.

ஆர்.டி.ஓ., மோகனதாஸ் விசாரணைக்கு பின் கோவிந்தராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு, ஏ.டி.எஸ்.பி சாமித்துரைவேல் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிந்தராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+