ஜன. 18 முதல் 23 வரை நெல்லையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
நெல்லை நெல்லையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் வருகிற ஜனவரி 18 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டிணம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற ஜனவரி 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
திருச்சி மண்டல ராணுவ கர்னல் சஞ்சீவ் குமார் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உடைய 18 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், தினமும் 5 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும், அடுத்த நாள் உடல் தகுதி தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்த ஆள்சேர்ப்பு முகாமிற்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய கலெக்டர், ஆள்சேர்ப்பு முகாம் நடத்த வசதியாக அதற்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயணடைய வேண்டும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications