அமெரிக்காவின் திவாலான வங்கிகளில் தமிழக அரசியல் தலைவரின் பணம்!!
சென்னை: அமெரிக்காவில் திவாலான மூன்று வங்கிகளில் தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பல கோடி டாலர் பணம் முடங்கி விட்டதாகவும், இந்த சோகம் காரணமாகவே பரபரப்பாக உலாவரும் அவர் இப்போது பம்மிக் கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரிசையாக அந்நாட்டு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இந்த ஒரு ஆண்டில் மட்டுமே இதுவரை 123 வங்கிகள் திவாலாகின. அவற்றை அமெரிக்கா காப்பீட்டுத் துறை ஏற்றுள்ளது.
இந்நிலையில் இந்த திவாலான வங்கிகள் மூன்றில், தமிழ்நாட்டின் பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவரது பெரும் பணம் டெபாஸிட் செய்யப்பட்டதாம்.
இந்தப் பணம் தேர்தல் நிதியாக பெரும் தொழிலதிபர்களிடமும், கூட்டணி பேரத்திலும் திரட்டப்பட்டதாம்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்தத் தலைவர் டெபாஸிட் செய்த வங்கிகள் மூன்றுமே திவாலாகி, மூடப்பட்டு விட்டனவாம்.
இந்த விவரம் தெரியவந்ததும் ஆடிப்போன தலைவர், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் விட்டாராம். சில விவரமான கைத்தடிகள், 'அண்ணே கலங்காதீங்க... இன்சூரன்ஸ்ல பணம் கெடச்சிடும்' என்றும், இன்னும் சிலர், 'குறிப்பிட்ட அளவுதாண்ணே கிடைக்கும் முழுசா கிடைக்காது' என்றும் மாற்றி மாற்றி சொல்லி வருவதால், வெறுத்துப் போய் யாரையும் பார்க்கக் கூட மறுத்து விட்டாராம்.
கூட்டணி, தேர்தல் என்று யாராவது தேடி வந்தாலும், அப்புறம் பார்க்கலாம் போங்கய்யா என்கிறாராம்.
ரொம்ப பெரிய தொகையாத்தான் கோட்டை விட்டிருக்காரு!!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications