130 இலங்கைத் தமிழர்களை நாடு கடத்த இந்தோனேசியா முடிவு
ஜகார்த்தா: மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்த படி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது.
மலேசியாவிலிருந்து சிறிய கப்பல் மூலம் 255 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, இந்தோனேசிய கடற்படை தனது கடல் எல்லைக்குள் வைத்து அவர்களை மடக்கியது. பின்னர் அவர்களை மேற்கு ஜாவா தீவுக்குக் கொண்டு சென்றது.
அன்று முதல் அவர்கள் கப்பலிலேயே உள்ளனர். புகலிடம் குறித்த உறுதிமொழி அளிக்கப்படும் வரை கப்பலை விட்டு இறங்க மாட்டோம். மீறி வெளியேற்ற முயன்றால் மொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளராக அலெக்ஸ் என்பவர் செயல்படுகிறார். ஆனால் இவர் ஆள் கடத்தலை மேற்கொள்பவர் என்று இலங்கை கூறி வருகிறது.
இந்த நிலையில் கப்பலை விட்டு இறங்க மறுக்கும் தமிழர்கள் பலரை, அதாவது 130 பேரை வலுக்கட்டாயமாக போர்க் கப்பலுக்கு ஏற்றி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளதாம்.
இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய காவல்துறை அதிகாரி பசிதார் தம்புனான் கூறுகையில், கப்பலில் இருப்பவர்கள் அவர்களது நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.
இந்தோனேசிய குடியேற்றப் பிரிவு அதிகாரி கடோட் சுப்ரதோ கூறுகையில், அவர்களை நாடு கடத்துவது குறித்து இந்தோனேசிய வெளியுறவுத்துறை நடவடிக்கைளில் இறங்கியுள்ளதாக கூறினார்.
இதுதொடர்பாக சிங்கப்பூரில் நடைபெரும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்தோனேசிய, ஆஸ்திரேலிய தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.
கடைசியாக வெளியான தகவல்களின்டி ஐ.நா. வகுத்துள்ள அகதிகளுக்கான அடையாளங்கள் இல்லாதவர்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்தி இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க இந்தோனேசியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே அலெக்ஸ் கனடாவில் பல வருடம் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர் ஆள் கடத்தல் தொடர்பாக சிக்கி கைதாகி சிறைவாசம் அனுபவித்தவர் என்றும் கூறப்படுகிறது. அவரது உண்மையான பெயர் சஞ்சீவ் குகேந்திர ராஜா என்று இலங்கை அரசு கூறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications