மரபணு சோதனைக்கு விரைவில் தனி சட்டம்
ஜெய்ப்பூர்: மரபணு (டிஎன்ஏ) பரிசோதனைக்காக தனி சட்டம் கொண்டுவரப்படும். இதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தடய அறிவியல் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் சிதம்பரம் பேசியதாவது:
நாட்டில் தொழில்நுட்பம் வளர்வது போல, குற்றங்களின் தன்மையும் நவீனமாகிக்கொண்டே போகின்றன. இதனால், வழக்கு விசாரணைகளில் முக்கிய பங்கு வகிக்கும் தடய அறிவியல் துறை சார்ந்த தன் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
குறிப்பாக, மரபணு பரிசோதனைக்கு தேவையான தனி சட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இத்துடன் மரபணு தகவல் வங்கியும் அமைக்கப்படும்.
தடயவியல் துறையை மேம்படுத்தவும், நவீன மயமாக்கவும் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மண்டல அளவில் 6 தடய அறிவியல் ஆய்வுக்கூடங்களும், 52 நடமாடும் ஆய்வுக் கூடங்களும் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 6 மத்திய ஆய்வுக் கூடங்களும் உள்ளன. வரும் 2010ம் ஆண்டை தடய அறிவியல் ஆண்டாகக் கடைபிடிக்கும் திட்டமும் உள்ளது.
ஆயுதக் கொள்கை மற்றும் ஆயுதச் சட்டங்கள் ஆகியவற்றில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications