6 தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிய ஆஸி.
சிட்னி: கடந்த ஏப்ரல் மாதம் அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த 50 இலங்கைத் தமிழர்களில் 6 பேரை ஆஸ்திரேலிய அரசு, மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது.
கடந்த ஏப்ரல் மாதம் 50 தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அரசியல் புகலிடம் கோரி வந்தனர்.
இவர்களை காப்பாற்றி மீட்ட ஆஸ்திரேலிய அரசு அவர்களின் அகதிகள் கோரிக்கையை பரிசிலீத்து வந்தது. இருப்பினும் அவர்களில் தற்போது 6 பேரின் கோரிக்கையை நிராகரித்து மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைத்து விட்டது. நவம்பர் 14ம் தேதி இவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து அகதிகளாக அங்கீகரிக்க முடியாது என்று ஆஸ்திரேலிய அரசு காரணம் தெரிவித்துள்ளது.
இதேபோல ஏற்கனவே 30 தமிழர்களை ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கேக திருப்பி அனுப்பி வைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த ஆண்டு இதுவரை 119 தமிழர்களை ஆஸ்திரேலிய அரசு இதுபோல தாயகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications