ஏன் தூர் வாரலை?-அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: தென் சென்னையில் மழைக்கு முன்பே தூர் வாரப்படாததைக் கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்கு முன்பே தூர் வாரும் பணியை அரசு மேற்கொள்ளாததால், தென் சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை சீர் செய்ய வலியுறுத்தியும், தூர் வாராததைக் கண்டித்தும் நாளை சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலிதா தெரிவித்துள்ளார்.
நிர்வாகிகளை பந்தாடிய ஜெ:
ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் பொறுப்பில் இருக்கும் சிங்காரவேல், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் துரை இளங்கோவன், பொருளாளர் பொறுப்பில் இருக்கும் பழனி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தர்மபுரி மண்டல அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் ராஜகோபால், சேலம் மண்டல இணை செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் தியாகராஜன், அந்தோணி ராஜ், சிவானந்தம், பொருளாளர் கதிர்வேல், கோவை மண்டல பொருளாளர் கோபால், விருதுநகர் மண்டல துணை தலைவர் ராஜு, மோகன், பொருளாளர் சுப்புராஜ், சந்திரன் ஆகியோரும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.
அண்ணா தொழிற்சங்க பேரவை துணைத் தலைவராக சிங்காரவேல், இணைச் செயலாளர்களாக சிவஞானம், சங்கரலிங்கம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்க பொருளாளராக துரை இளங்கோவன் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தர்மபுரி மண்டல அண்ணா தொழிற் சங்கத் துணைத் தலைவர்களாக மாதுசாமி, நாகசேகரன், சேலம் மண்டல துணை காவலர்களாக ராமசுந்தரம், பழனிசாமி, சதாசிவம், இணை செயலாளர்களாக ராஜாராம், பூமாலை, துணை செயலாளர்களாக சுப்பிரமணி, மனோகரன், பொருளாளராக ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
சேலம் மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் சங்க தலைவராக மதிவாணன், துணைத் தலைவராக நல்லுசாமி, செயலாளராக பாலசுந்தரம், இணைச் செயலாளர்களாக மாணிக்கம், மணி, துணைச் செயலாளர்களாக சிவானந்தம், சுசிலா பொருளாளராக ராஜேந்திரன் ஆகியோரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல அண்ணா தொழிற் சங்க தலைவராக பாலமுரளி, பொருளாளராக கண்ணன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள்.
போக்குவரத்துக்கழக விருதுநகர் மண்டல அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர்களாக வெங்கடகிருஷ்ணன், பாண்டியன், துணைச் செயலாளர்களாக சந்தானம், வீரப்பன், பொருளாளராக பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications