காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி உடல் மீட்பு
குன்னூர்: குன்னூர் அருகே பாலத்தை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமியின் உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மழையின் கோர தாண்டவத்தால் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 43 பேர் பலியானார்கள். காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
கடந்த வாரம் குன்னூர் அருகே கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் பாலத்தை கடக்க முயன்ற ராணி (வயது 36). அவரது மகள் ஜீவிதா (6) ஆகியோர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். கிராம மக்கள் ராணியின் உடலை உடனே மீட்டனர். சிறுமியின் உடல் மட்டும் சிக்கவில்லை.
இந்த நிலையில் தூதூர் மட்டத்தில் காட்டுப்பகுதிக்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அறிந்தனர். வன விலங்குகள் இறந்து கிடக்கிறதா என்று பார்த்த போது, மரக்கிளையில் சிறுமி ஜீவிதாவின் உடல் சிக்கியிருப்பது தெரிய வந்தது. உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து போலீசுக்கும், தீயணைப்புதுறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications