தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்... அதிர்ச்சியில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த உயர்வு போதுமா... இன்னும் வேணுமா என்று கேட்கும் அளவுக்கு தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது தங்கம் விலை. இன்று

நேற்றும் இன்றும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் இன்று சவரன் விலை ரூ. 13000த்தை நெருங்கியது.

புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி சவரன் ரூ 12888 ஆக விற்கப்படுகிறது.

கடந்த 17 தினங்களில் பவுனுக்கு ரூ.960 அளவுக்கு உயர்வு ஏற்பட்டு இருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இன்னொரு பக்கம், இந்த விலை உயர்வைக் காரணமாக வைத்து பல நகைக் கடைக்காரர்களும் செய்கூலி, சேதாரத்தின் சதவிகிதத்தை நைஸாக உயர்த்திவிட்டுள்ளனர்.

இந்த விலை உயர்வு காரணமாக வாடிக்கையாளர் எண்ணிக்கை ஓரளவுதான் குறைந்துள்ளது. பெரிய நகைக் கடைகளில் இன்னும் பரபரப்பாகவே விற்பனை உள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிடம் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.

இதனால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை என்பதுதான் நகை வியாபாரிகள் சொல்லும் கலக்கமூட்டும் செய்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+