லண்டன்: இந்திய பெண் கொடூர கொலை-கணவர் கைது
லண்டன்: கைகளைத் துண்டித்து தனது மனைவியைக் கொலை செய்த இந்தியரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட 28 வயதான அந்த இளம் பெண்ணின் பெயர் கீதா அலாக். லண்டனில் உள்ள மிகப் பெரிய ஆசிய ரேடியோ நிறுவனமான சன்ரைஸ் ரேடியோவில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
திங்கள்கிழமை மாலை இவர் லண்டனுக்கு வெளியே கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மிகக் கொடூரமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மேற்கு லண்டன் புறநகரான கிரீன்போர்ட் என்ற இடத்தில் அவர் கிடந்தார். கைகள் துண்டிக்கப்பட்டது போக தலையிலும் காயம் காணப்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திங்கள்கிழமை மாலை பணி முடிந்து தனது இரு குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக கிளம்பிச் சென்றபோது கீதா தாக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகத்தின்பேரில் கீதாவின் கணவர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்து போலீஸார் இதுவரை முறைப்படி அறிவிக்கவில்லை.
கீதாவும், அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் லண்டன் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்போர்ட் மற்றும் அதற்கு அருகில் உள்ள செளத்ஹால் பகுதிகளில் பஞ்சாபி மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். கீதாவும் பஞ்சாபிதான். லண்டனிலேயே அதிக அளவில் பஞ்சாபிகள் வசிக்கும் பகுதி செளத்ஹால் மற்றும் கிரீன்போர்ட் என்பது குறிப்பிடத்தக்து. செளத்ஹாலில் கீதாவின் வீடு உள்ளது.
கீதா இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர். அவரது கணவர் பஞ்சாபில் பிறந்தவர் ஆவார். ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். அவர்களின் இரு குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமை கீதாவுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
கீதா கைகள் துண்டிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது அவரை வேடிக்கை பார்க்க நிறையப் பேர் கூடியுள்ளனர். ஆனால் யாருமே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயலவில்லையாம். அவரை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் ஒரு வேளை உயிர் பிழைக்க வைத்திருக்கலாம் என போலீஸார் வேதனையுடன் கூறினர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications