எம்.இ. படித்து கொண்டே பி.இ. வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள்!
சென்னை: விதியை மீறும் வகையில், பி.இ படித்து முடித்த பின்னர் அதே கல்லூரியில் முழு நேர எம்.இ. படிப்பில் சேர்ந்து கொண்டு, பி.இ. மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 28 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பி.இ. பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பி.இ. படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தும் ஆசிரியர்களாக பணி புரியலாம். அல்லது பி.இ. பட்டதாரிகள் வேலை பார்த்துக் கொண்டு பகுதி நேரமாக எம்.இ.படிக்கலாம். ஆனால் ஒரே கல்லூரியில் பி.இ. பட்டதாரிகள் ஆசிரியராக முழுநேர ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே முழு நேர மாணவராக எம்.இ. படிக்கிறார்கள் என்று பல தரப்பில் இருந்து பல புகார்கள் வந்தன.
இதுகுறித்து சில மாணவர்கள் அனுப்பிய புகார்களில் எங்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் எங்கள் கல்லூரியிலேயே எம்.இ.படிக்கிறார்கள். இது எப்படி என்று எழுதி இருந்தனர்.
அது மட்டுமல்லாமல் ஒரு கல்லூரியில் முழு நேர ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு கல்லூரியில் முழுநேர எம்.இ. மாணவராக படிப்பது போல வருகை பதிவு செய்யப்படுகிறது என்றும் புகார்கள் வந்தன. இவை இரண்டும் முறைகேடுகளாகும், விதி மீறலாகும்.
இது தொடர்பாக எம்.இ., எம்.டெக். படிப்பு நடத்தும் 70 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது 21 கல்லூரிகளில், ஒரே கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டே அதே கல்லூரியில் எம்.இ. படித்தவர்கள் இருப்பது தெரிந்தது.
இதேபோல, 7 கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டே வேறு கல்லூரியில் எம்.இ.படித்த மாணவர்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த 28 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 20-ந்தேதிக்குள் பதில் தரும்படி தெரிவித்துள்ளோம். இந்த 28 கல்லூரிகளிலும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தர 5 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications