பறவைத் தாக்குதல் - விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி நஷ்டம்!
ஏற்கனவே பெரும் பொருளாதார சிக்கலில் அனைத்து விமான நிறுவனங்களும் தவித்து வரும் நிலையில், புதிதாக ஒரு கஷ்டமும் கூட வந்து நஷ்டத்தை கூட்டி விட்டுள்ளது.
இந்த ஆண்டு, பறவைத் தாக்குதலால் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 241 பறவைத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
பறவைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட கிங்பிஷர்தான். அந்த நிறுவனத்தின் விமானங்களில் பறவைகள் மோதி சம்பவங்கள் 60 நடந்துள்ளன. அடுத்து ஜெட் ஏர்வேஸ் 49, ஸ்பைஸ்ஜெட் 30, இன்டிகோ 27, ஏர் இந்தியா 24, கோஏர் 7 என பறவைகள் தாக்கியுள்ளன.
பாரமவுன்ட் விமானத்தை ஒரே ஒரு பறவை மட்டுமே இந்த ஆண்டு தாக்கியுள்ளது.
இதேபோல சர்வதேச விமானங்கள் மீது பறவை மோதிய சம்பவங்களின் எண்ணிக்கை 34 ஆகும்.
பறவைகள் மோதலால் ஏற்பட்ட நஷ்டத்தில் இன்டிகோதான் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு மட்டும் ரூ. 87 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாம். அடுத்து கோ ஏர் நிறுவனத்திற்கு ரூ. 45.6 லட்சம் நஷ்டமும், ஜெட் ஏர்வேஸுக்கு ரூ. 8.91 லட்சம் நஷ்டமும், ஸ்பைஸ் ஜெட்டுக்கு ரூ. 5.57 லட்சமும் நஷ்டம் ஏற்பட்டது.
கிங்பிஷர், ஏர் இந்தியாவின் நஷ்டக் கணக்கு தெரிவிக்கப்படவில்லை.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்













Click it and Unblock the Notifications