நாகர்கோவில், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்
சென்னை: விழாக்கால கூட்ட நெரிசலைத் தவி்ர்க்க சென்னையி்ல் இருந்து நாகர்கோவில் மற்றும் செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழன்தோறும் இயக்கப்படும் ரயில் (0637), எழும்பூரிலிருந்து இரவு 8.20க்கு புறப்படும். மறுநாள் பகல் 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமைதோறும் மதியம் 1.30க்கு புறப்படும் ரயில் (0638) மறுநாள் அதிகாலை 4.25க்கு சென்னை வந்து சேரும். டிசம்பர் 17ம் தேதி முதல் ஜனவர் 28ம் தேதி வரை இந்த இரு ரயில்களும் இயக்கப்படும்.
திங்கள்கிழமைதோறும் எழும்பூரில் இருந்து மாலை 6.45க்கு புறப்படு்ம் ரயில் (0639) மறுநாள் காலை 8.05க்கு நாகர்கோயில் சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (0640) நாகர்கோவிலில் இருந்து செவ்வாய்கிழமைகளில் மதியம் 1.30க்கு புறப்படும்.
இவ்விரு ரயில்களின் சேவை டிசம்பர் 14ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை.
நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 7.40க்கு புறப்படும் ரயில் (0652) மறுநாள் காலை 8.55க்கு எழும்பூர் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து செவ்வாய்கிழமைகளில் மதியம் 2.40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.30க்கு நாகர்கோவில் சென்றடையும். டிசம்பர் 15 முதல் ஜனவரி 26 வரை இந்த ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 16ம் தேதி முதல் புதன்கிழமைகளில் இரவு 7.30க்கு புறப்படும் ஏழைகள் ரதம் (0607), மறுநாள் காலை 11.05க்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் வியான்கிழமை மதியம் 1.30க்கு நாகர்கோவிலில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.50க்கு சென்ட்ரல் வந்துசேரும்.
சென்னை- செங்கோட்டை: சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமைதோறும் இரவு 8.20க்கு புறப்படும் சிறப்பு ரயில் (0609) மறுநாள் காலை 10.25க்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையில் மதியம் 2.25க்கு புறப்படும். இந்த ரயில்களின் சேவை டிசம்வர் 19 முதல் ஜனவர் 30 வரை இருக்கும்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications