மின்னல் தாக்கி ஜெலட்டின் குச்சிகள் வெடித்துச் சிதறியதில் 5 பேர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்னல் தாக்கியதில் கல் குவாரியில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளில் மின்சாரம் பாய்ந்து, அது வைக்கப்பட்டிருந்த பாறை வெடித்துச் சிதறியது. இதில் 5 பேர் உடல் கருகி பலியானார்கள்.
காஞ்சிபுரத்தை அடுத்த தாளவாக்கம் அருகே உள்ள மதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு நேற்று மாலை 3.30 மணி அளவில் பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
பாறைக்கு அடியில் அவர்கள் ஜெலட்டின் குச்சிகளை வைத்து விட்டு மற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தொழிலாளர்கள் சற்று தள்ளிச் சென்று ஒதுங்கி நின்றார்கள்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் ஜெலட்டின் குச்சிகளில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவை வைக்கப்பட்டிருந்த பாறை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
வெடித்துச் சிதறிய பாறை துண்டுகள் நாலாபுறமும் சிதறின. பாறை துண்டுகள் தாக்கியதில், திருவண்ணாமலை மாவட்டம் நடுபாதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (28), ஊத்தங்கரை மண்ணடிப்பட்டைச் சேர்ந்த மனோகர் (50), சேலத்தைச் சேர்ந்த ஏழுமலை (45), மைசூரைச் சேர்ந்த செல்வராஜ் (40), செங்கல்பட்டு படூர் கிராமத்தைச் சேர்ந்த செவ்வந்தி (30) ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆறு பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் அமுல் என்ற பெண், பாபு, தாமோதரன் ஆகியோர் மட்டும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications