அரசியலில் இருந்து ஓய்வு-அர்னால்ட் முடிவு

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியில் சேர்ந்து கலிபோர்னியா கவர்னரான அர்னால்ட் தற்போது 2வது முறையாக கவர்னர் பொறுப்பேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2010ம் ஆண்டு இறுதியில் முடிவடைகிறது.
இதன் பிறகு அர்னால்டை அமெரிக்க அதிபர் தேர்தலில் நிறுத்த குடியரசுக் கட்சியில் பேசப்பட்டு வருகிறது. அர்னால்ட் ஆஸ்திரியாவில் பிறந்தவராக இருந்தாலும், ஜனநாயக கட்சிக்கு சரியான போட்டியாக திகழ்வார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அர்னால்ட் அறிவித்துளளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
நான் எப்போதுமே என்னை ஒரு அரசியல்வாதியாக முத்திரை குத்திக்கொண்டது கிடையாது. அதனால், நான் எதற்காகவும், எதை நோக்கியும் ஓட மாட்டேன். இனி எந்த பதவிக்காகவும் போட்டியிட மாட்டேன்.
கலிபோர்னியா கவர்னர் பதவிக்காலம் முடிந்த பிறகு எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடும் எண்ணமில்லை. இப்போதைய கவர்னர் பதவியே என்னுடைய கடைசி பதவி என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications