நியூஸிலாந்து அருகே கடலுக்கடியில் பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
வெலிங்டன்: நியூஸிலாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுக்கு அருகே கடலுக்கடியில் இன்று காலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் எதுவுமில்லை.
உள்ளூர் நேரப்படி, காலை 11.47 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ஆக்லாந்தில் இருந்து வடகிழக்கில் 730 கி.மீ தூரத்திலும், ரவுல் தீவிலிருந்து தென்மேற்கே 350 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருந்ததாக நியூஸிலாந்து புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications