தறிகெட்டு பாயும் தங்கத்தின் விலை... ஒரே நாளில் 152 அதிகரிப்பு!
சென்னை: தங்க விலை உயர்வு விஷயத்தில் இனி வரலாறு காணாத என்ற வார்த்தையையே மீடியா பயன்படுத்தத் தேவையில்லை. இந்த விஷயத்தில் இனி நாம் பார்க்கப் போவதெல்லாம் வரலாறு காணாத உயர்வுதான்.
ஒருகிராம் விலை ரூ 2 ஆயிரத்தை நெருங்க ஆரம்பித்துவிட்டது தங்கம் விலை. இந்த விலை உயர்வோடு சேர்த்தால் 20 நாள்களில் 1200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது ஒரு சவரனுக்கு. இந்தியாவில் வேறு எந்தப் பொருளின் விலையும் இப்படி தாறுமாறான உயர்வைச் சந்தித்ததில்லை, சமீப நாட்களில்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் தங்கம் விலை சற்று குறைவதுபோல போக்குக் காட்டியது. ஆனால் நேற்று அதை தூக்கிச் சாப்பிடுவதுபோல சவரனுக்கு ரூ 152 அதிகரித்துள்ளது.
இன்றைய விலை சவரன் ரூ. 13024. கிராம் விலை ரூ. 1628.
இந்த உயர்வு குறித்து தி நகர் தங்க நகை வியாபாரிகள் இப்படிச் சொல்கிறார்கள்:
"தங்கத்தின் விலை இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் சர்வதேச மற்றும் உள்ளூர் நிலைமை அப்படி. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிராம் ரூ 2 ஆயிரத்தைத் தொட்டுவிடும். காரணம் சர்வதேச அளவில் தங்கத்துக்கு கடுமே் நெருக்கடி உள்ளது. இந்தியாவிலோ மக்களுக்கு அது கட்டாயத் தேவையாகிவிட்டது!"
நகைக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்!
வியாபாரிகள் இதுபோன்ற அனுமானங்களைத் தொடர்ந்து கூறிவருவதால், மக்கள் இப்போதே தங்கத்தை வாங்கிவிடலாம் என படையெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர். தி நகரின் பிரபல நகைக்கடைகளில் திங்கள் கிழமை நுழைவதற்கு இடமில்லாத அளவு கூட்டம் நிரம்பி வழிந்தது.
பண்டிகைக் காலமும், திருமண சீஸனும் சேர்ந்துவிட்டதால் விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் மக்கள் தங்கத்தை வாங்கித் தீரவேண்டிய கட்டாயத்திலிருப்பதைப் புரிந்து கொண்டாட்டத்தில் உள்ளனர் நகைக் கடைக்காரர்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications