அர்ச்சகருடன் உல்லாசம்-பெண்களிடம் போலீஸ் ரகசிய விசாரணை

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் ஆபாச அசிங்கச் செயலில் ஈடுபட்டு தற்போது அர்ச்சகர் தேவநாதன் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீஸார் தீவிர விசரணை நடத்தினர்.
இதையடுத்து அவருடன் கோவிலில் அசிங்கமாக நடந்து கொண்ட பெண்களிடம் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் தேவநாதன் பெண்களுடன் கொட்டம் அடித்த லாட்ஜுகளுக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேவநாதனின் செல்போன் கேமராவில் ஒரு பெண்ணுடன் தேவநாதன் உல்லாசமாக இருப்பதும், அந்த உல்லாசம் முடிந்த பின்னர் அந்தப் பெண்ணிடம் தேவநாதன் பணம் கொடுப்பது போலவும் ஒரு காட்சி உள்ளது. இந்தக் காட்சி அந்தப் பெண்ணின் வீட்டிலேயே அரங்கேறியுள்ளது. அந்தப் பெண்ணையும் போலீசார் விசாரிக்கவுள்ளனர்.
பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை தனது கேமரா செல்போன் மூலம் படம் பிடித்ததாக தேவநாதன் கூறியுள்ளார். ஆனால் அது செல்போன் பழுது பார்க்கும் கடையின் ஊழியர் மூலமாக வெளியே கசிந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அதை வெளியே விடுவதற்கு முன்பு அந்தக் கடைக்காரர், தேவநாதனிடம் பணம் கேட்டு பேரம் பேசியதாக தெரிகிறது. அது படியாததால்தான் வெளியே ரிலீஸ் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மீண்டும் தேவநாதனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முயன்று வருகின்றனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி:
இந் நிலையில் தேவநாதனின் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தன்னை ஜாமீனில் விடக்கோரி அவர் தாக்கல் செய்த மனு மாஜித்திரேட் ஜி.சுதா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'தேவநாதன் போலீசுடன் முழுமையாக ஒத்துழைக்க மறுக்கிறார். அவருடன் தொடர்பு கொண்டிருந்த பெண்கள் பற்றிய தகவல்களை பெற வேண்டியுள்ளது' எனக் கூறி ஜாமீனுக்கு அனுமதி அளி்க்க எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் தான் இருந்து வந்துள்ளார். போலீஸ் காவலில் அவரை விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர் என்றும் அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து, தேவநாதனின் மனுவை காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, அர்ச்சகர் தரப்பு வக்கீல் வாதாடிய போது, தேவநாதனின் லீலைகள் எனக்கூறப்படும் 'சிடி' தங்களுக்கு கிடைத்து ஒரு மாதத்திற்கு பிறகு தான் போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இதில் போலீசார் கம்ப்யூட்டர் கிராஃபிக் மூலம் படங்களை உருவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இந்த 'சிடி'யை ஆதாரமாக கருதக்கூடாது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications