கர்ப்பிணியை நிர்வாணமாக்கி தாக்கிய கிராமவாசிகள்
லக்னோ: நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்காதால், கரிப்பிணிப் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்த கொடூரம் லக்னோ அருகில் உள்ள கிராமத்தில் நடந்துள்ளது.
லக்னோ அருகே, பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள கர்ணவாலா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 25 வயதான தாரிணி என்ற இப்பெண்ணின் கணவருக்கு சொந்தமான இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிக்க பல நாட்களாக முயன்று வந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆக்கிரமிப்பு கும்பல் வந்தபோது, தாரிணியின் கணவர் வீட்டில் இல்லை. தாரிணி தங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து உள்ளே நுழைந்த ஆக்கிரமிப்பு கும்பலை தாரிணி தடுக்க முயன்றபோது தகராறு ஏற்பட்டது. குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல், அக்கும்பலில் இருந்தவர்கள் தாரிணியை கிழே தள்ளி உதைத்துள்ளனர். அருகில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து தாறுமாறாக அடித்தனர்.
அதோடு நிற்காமல், தாரிணியின் தலை முடியை பிடித்து தெருவிற்கு இழுத்து வந்து, சேலையையும் உருவியுள்ளனர். இந்த மிருகத்தனமான தாக்குதலால், தாரிணியின் வயிற்றில் இருந்த கரு சிதைந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் கவுதம் கூறினார்.
இச்சம்பவத்துக்கு காரணமான முக்கியமான 4 பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவு ஆனவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications