For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிபரான் அறிக்கை ஒரு அரசியல் சதி: பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டிய ஒன்று-கல்யாண் சிங்

By Staff
Google Oneindia Tamil News

Kalyan Singh
டெல்லி: லிபரான் கமிஷன் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதில் அரசியல் நெடி வீசுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டிய ஒன்றதான். அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் நிச்சயம் வரும் என்று கூறியுள்ளார் லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.

லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து கல்யாண் சிங் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த அறிக்கையை ஒரு அரசியல் சதியாகவே நான் கருதுகிறேன். 1992ம் ஆண்டு,டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்ட கட்டடத்திற்குப் பதிலாக அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் நிச்சயம் வரும். நிச்சயம் ஒரு கோவில் வரும், கோவில் வரும், கோவில் வரும்.

லிபரான் அறிக்கையில் அரசியல் நெடிதான் வீசுகிறது. மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக லிபான் கூறுவது அபத்தமானது. மசூதியை அடிக்க சதித் திட்டம் தேவைப்பட்டிருக்கவில்லை. முன்கூட்டியே திட்டமிடத் தேவையில்லாமல்தான் இருந்தது. டிசம்பர் 6ம் தேதி நடந்தது மக்களின் கொதிப்பு. ஒரு குண்டுவெடிப்பைப் போன்றது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இஸ்லாமிய சமூகத்தினர் ஒத்துழைக்க வேண்டும். அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு விட்டால் நாட்டில் அமைதி நிலவும். இந்தப் பதட்டமெல்லாம் முடிவுக்கு வந்து விடும்.

காலவரையின்றி ராமர் கோவில் கட்டுவதை தள்ளிப் போட்டால், அது இந்துக்களுக்கும் சரி, முஸ்லீம்களுக்கும் சரி எந்தவிதப் பலனையும் தராது.

எவ்வளவு விரைவில் கோவில் கட்டப்படுகிறதோ, அவ்வளவுக்கு நாட்டுக்கு நல்லது. மீண்டும் அங்கு மசூதி வர முடியாது.

சம்பவ நாளன்று, பெரும் திரளாக கூடியிருந்த கரசேவகர்களைக் கலைக்க தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை பயன்படுத்துமாறும், துப்பாக்கிச் சூட்டில் இறங்கக் கூடாது என்றும் போலீஸாருக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். துப்பாக்கிச் சூடு நடத்த நான் உத்தரவிட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோர் இறந்து போயிருப்பார்கள். பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

எனக்கு முன்பு அப்போது இருந்த கேள்வி, நான் யாரைக் காக்க வேண்டும் என்பதுதான். பெரும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் நான் தடுத்தேன், மிகப் பெரிய உயிரிழப்புகள் நேராமல் நான் தடுத்தேன். இந்த களேபரத்தில் மசூதி இடிக்கப்பட்டு விட்டது.

இதற்காக நான் வருத்தமே படவில்லை. அங்கு ராமர் கோவில் வர வேண்டும். அதற்கு இந்த கட்டடம் (மசூதி) போக வேண்டியதிருந்தது என்றார் கல்யாண் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X