மடிகேரியில் காவிரித்தாய் சிலை கண்டெடு்ப்பு
மடிகேரி: மடிகேரி கோட்டைக்கு அருகே காவிரித் தாயின் பழங்கால சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி கோட்டைக்கு அருகே தோட்டம் அமைக்கும் பணியை சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணியை கான்டிராக்டர் ஒருவரிடம் சுற்றுலாத் துறை ஒப்படைத்தது.
கோட்டையின் மதில் சுவரோரம் அடர்த்தியாக படர்ந்திருந்த மரம், செடிகளை பணியாளர்கள் அப்புறப்படுத்திய போது காவிரித் தாயின் சிலை கிடைத்துள்ளது.
அடர்ந்த முட்புதர்களுக்கு மத்தியில், மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் காவிரித்தாய் சிலை கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியை சுற்றி அரசு அலுவலகங்களும், நீதிமன்ற கட்டிடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காவிரித்தாயின் சிலையை சுத்தப்படுத்தி, வண்ணம் பூசி அதே இடத்தில் தோட்டத்திற்கு மத்தியில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிதியுதவி செய்யவும் பலர் முன்வந்துள்ளனர்.
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து பிறந்தவள் என்றும் காவேர மன்னனுக்கு பிரம்மா அருளிய தவப்புதல்வி என்றும் ஸ்ரீரங்க ரங்கநாயகியின் தாய் என்றும் காவிரித் தாய் பற்றி வரலாற்று புராணக்கதைகள் உண்டு.
மயிலாடுதுறையில் உள்ள தேரழுந்தூர் உட்பட பல்வேறு இடங்களில் காவிரித்தாய்க்கு கோயில்களும் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications