தாஜ் ஹோட்டலில் டாடா தலைமையில் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பைத் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, தீவிரவாதிகளின் அசுரப் பிடியில் சிக்கி மீண்ட தாஜ்மஹால் பேலஸ் மற்றும் டவர் ஹோட்டலின ஊழியர்களிடையே இன்று இரவு பேசினார் தாஜ் ஹோட்டல் உரிமையாளரான டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா.
மேலும், பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இந்த நிழ்ச்சியில், தாக்குதலின்போது பலியான தாஜ் ஹோட்டல் ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஹோட்டலின் பாலஸ் பிரிவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்க தாஜ் ஹோட்டல் குழுமம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications