அசிங்க அர்ச்சகர் தேவநாதன் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம்
காஞ்சிபுரம்: பக்தர்கள் தட்டில் போடும் தட்சணையை வைத்து பிழைப்பு நடத்தி வந்த அர்ச்சகர் தேவநாதனின் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் பணம் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு பணம் எப்படி இவருக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்த வங்கிக் கணக்கு தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவில் கருவறையில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைதாகியுள்ள காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே 2 நாள் காவலில் எடுத்து அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது 2வது முறையாக அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வேலூர் சிறையிலிருந்து அவரை காஞ்சிபுரம் கொண்டு வந்தனர். பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து தேவநாதனிடம் விசாரணை நடந்து வருகிறது.
தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். அப்போது காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
தேவநாதன் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று தற்போது போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.
மேலும் 5 பெண்களுடன் தொடர்பு...
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. யார் அவர்கள், எப்போது படம் எடுக்கப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பெண்கள் யார் என்று தேவநாதனிடம் கேட்டபோது கோபமானாராம அவர். ஒவ்வொருத்தாளும், தங்களுக்குப் பிடித்தவாளை படம் எடுத்து வச்சுக்குவா, அது நடிகையாகவும் இருக்கலாம், வேறு பெண்ணாகவும் இருக்கலாம். இதெல்லாம் தப்பா.. எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். அவாளை காட்டி கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்தாராம்.
இருந்தாலும் உரிய முறையி்ல் விசாரித்து தேவநாதன் செல்போன் மெமரியில் இருக்கும் 'பொம்மனாட்டிகள்' யார் என்பதை அறிய போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications