ஹைதராபாத் விமானத்துக்கு குண்டு மிரட்டல்-ஒருவர் கைது
டெல்லி: டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த இன்டிகோ நிறுவன விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்த மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து நேற்றிரவு 8.55 மணிக்கு 164 பயணிகளுடன் இந்த விமானம் கிளம்பத் தயாரானது. விமானம் கிளம்பவிருந்த நிலையில் அதில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் கால் சென்டருக்கு மிரட்டல் தொலைபேசி வந்தது.
இதையடுத்து அந்த விமானத்தை சிஆர்பிஎப் படையினர் சுற்றி வளைத்து பயணிகளை அவசரமாக இறக்கிவிட்டுவிட்டு விமானத்தை தனியாக ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று சோதனை நடத்தினர்.
ஆனால், அதில் குண்டு ஏதும் இல்லை.
இந்த தொலைபேசி அழைப்பு யமுனா விகார் பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி பூத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து டெல்லி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு 22 வயதான முபாரக் என்ற நபரை கைது செய்தனர்.
இவரது உறவினர் ருஷ்மான் மாலிக் என்பவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கி இருந்தார். ஆனால், அவர் விமான நிலையம் செல்ல தாமதமானதால் விமானத்தை சில மணி நேரம் தாமதிக்க முபாரக் குண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
ருஷ்மான் மாலிக்கிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானம் முழுமையாக சோதனையிடப்பட்ட பின் நள்ளிரவு 12 மணிக்குக் கிளம்பிச் சென்றது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications