அரிசி, மணலோடு இப்போது அரசு இலவச கலர் டிவியும் கடத்தல்!

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 17 இலவச அரசு கலர் டிவிகள் பிடிபட்டுள்ளன.
சென்னை கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து தமிழக அரசு வழங்கிய இலவச கலர் டிவிக்களை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் முரளி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியாருக்கு சொந்தமான பால் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது பால் வேனில் தமிழக அரசு வழங்கிய 17 டிவிக்கள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் டிவிக்களை பறிமுதல் செய்ததோடு வேன் டிரைவர் ஆறுமுகம் (50) மற்றும் வேனில் இருந்த சிவக்குமார் (35) ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வண்ணாரப் பேட்டை, கொடுங்கையூர், தண்டை யார்பேட்டை பகுதியில் இலவச கலர் டிவிக்களை ரூ.1200க்கு வாங்கி பால் வேனில் ஆந்திராவுக்கு கொண்டு சென்று அங்கு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பது தெரியவந்தது.
அரிசிக் கடத்தல், மணல் கடத்தல் வரிசையில் இப்போது கலர் டிவி கடத்தலும் சேர்ந்திருப்பது மக்களை அதிர வைத்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications