புதுச்சேரி முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்
புதுச்சேரி: அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரக் கோரி புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கத்தை சந்தித்து முறையிட நரிக்குறவர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு சந்தைபுதுக்குப்பத்தில் 20 வருடங்களாக நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கலிதீர்த்தாள் குப்பத்தில் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
தற்போது 23 குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர். தற்போது பெய்த தொடர்மழையின் காரணமாக அவர்களின் குடும்பத்தினர் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முதல்வர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்திக்க நேற்று காலை 6 மணியளவில் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் முதல்வரை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அறைக்கு சென்று சந்திக்குமாறு கூறினார். உடனே அவர்கள் அங்கிருந்து சட்டசபைக்கு சென்றனர். மதியம் 12 மணி வரை அங்கு காத்திருந்தனர். அதுவரை முதலமைச்சரை சந்திக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முதல்வரை சந்திக்க வந்து, பார்க்க முடியாமல் திரும்பிய நரிக்குறவர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications