நிபந்தனை-தளர்த்தக் கோரும் என்கேகேபி ராஜா
ஈரோடு : தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி என்கேகேபி ராஜா ஈரோடு செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
முன்னாள் திமுக அமைச்சரான என்கேகேபி ராஜா, பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் என்பவரை தனது வீட்டுக்கு வரவழைத்து சரமாரியாக தாக்கியதாக புகார் எழுந்தது.
இந்த தாக்குதலில் ராஜாவின் 2வது மனைவி உமா மகேஸ்வரி, உதவியாளர் காஞ்சி குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் தரப்பட்டது.
இதன் பேரில் அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் காஞ்சிகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் முன் ஜாமீன் கேட்டு ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அங்கு அவர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவரும் பெருந்துறை கோர்ட்டில் சரணடைந்தனர். அங்கு அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
ராஜாவும், உமாமகேஸ்வரியும் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மறு உத்தரவு வரும் வரை தினசரி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி இருவரும் கையெழுத்துப் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உமா மகேஸ்வரிக்கு நிபந்தனை தளர்த்தப்பட்டது. அதன்படி தற்போது அவர் பெருந்துறை கோர்ட்டில் தினசரி கையெழுத்து போட்டு வருகிறார்.
இந்த நிலையில், என்.கே. கே.பி.ராஜாவும் நிபந்தனையை தளர்த்தக்கோரி ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications