டைகர் உட்ஸுக்கு 2 பெண்களுடன் தொடர்பு!

இந்த நிலையில், தான் பாவம் செய்திருப்பதாக டைகர் உட்ஸ் தனது இணையதளத்தில் எழுதியுள்ளார்.
ஒரு கார் விபத்தில் சிக்கினாலும் சிக்கினார், டைகர் உட்ஸின் உள் விஷயங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி அவரது கேரியரை பெரும் கேள்விக்குறியாக்கி வருகின்றன.
நவம்பர் 27ம் தேதி புளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய உட்ஸ் விபத்தில் சிக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது.
ஆனால் இந்தக் காயம் விபத்தால் ஏற்பட்டதல்ல, மாறாக அவரது மனைவி தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்று பின்னர் தெரிய வந்தது.
உட்ஸுக்கும், நியூயார்க்கைச் சேர்ந்த பார் ஊழியையான ராச்சல் உசிதலுக்கும் இடையே தொடர்பு இருப்பது உட்ஸின் மனைவிக்குத் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உட்ஸுடன் சண்டை பிடித்ததாகவும், அவரைத் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அவரிடமிருந்து தப்பவே வேகமாக வெளியேறி காரை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார் உட்ஸ். அப்போதுதான் விபத்து நடந்தது.
உட்ஸை, அவரது மனைவி கோல்ப் மட்டையால் துரத்திக் கொண்டு வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததால் விவகாரம் சூடு பிடித்தது.
இந்த நிலையில் தற்போது இன்னொரு பெண் தனக்கும், உட்ஸுக்கும் இடையே 31 மாத கால உறவு இருப்பதாக போட்டு உடைத்துள்ளார்.
அவர் லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த கிளப் ஒன்றில், மதுபானங்களை பரிமாறும் ஊழியை ஆவார். பெயர் ஜெய்மி கிரப்ஸ். தனக்கும், உட்ஸுக்கும் 31 மாத காலமாக தொடர்பு இருப்பதாக ஜெய்மி கூறியுள்ளார்.
அத்தோடு நில்லாமல், உட்ஸ் தனக்கு அனுப்பிய வாய்ஸ் மெயிலையும் அவர் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில், தயவு செய்து உனது பெயரை உன்னுடைய போனிலிருந்து எடுத்து விடேன். எனது மனைவி என்னுடைய போனை அடிக்கடி பரிசோதிக்கிறாள். எனவே எனக்காக இதை செய், வேகமாக செய், பிறகு பேசுகிறேன், பை என்று கூறியுள்ளார் உட்ஸ்.
அடுத்தடுத்து இரு பெண்களுடன் உட்ஸுக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் உட்ஸின் நிலை பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் தனது இணையதளத்தில், நான் பாவம் செய்து விட்டேன், அதை இதயப்பூர்வமாக உணர்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் உட்ஸ்.
நவம்பர் 27ம் தேதி நடந்த விபத்துக்குப் பின்னர் உட்ஸ் தனது வீட்டை விட்டு வெளியே வராமல் அடைந்து கிடக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications