ஹெட்லி-ராணாவுடன் தொடர்பு: தவறான தகவலால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்
மும்பை: ராணா மற்றும் ஹெட்லியுடன் தொடர்புடைய அலுவலகங்கள் மூலம் குடியேற்ற சேவையை மேற்கொண்ட இந்தியரை அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். அவரை டெல்லி விமான நிலையத்தில் விசாரித்த இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவருக்கும், ஹெட்லி, ராணாவுக்கும் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஹெட்லி, ராணாவின் மும்பை குடியுரிமை சேவை அலுவலகம் மூலம் அந்த இந்தியர் விசா உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அவர் ஹெட்லி, ராணாவின் அலுவலகங்கள் மூலமாக விசா உள்ளிட்டவற்றைப் பெற்றதை அறிந்த அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டனர்.
மேலும், இந்திய குடியரிமைப் பிரிவு அதிகாரிகளுக்கும் அந்த இந்தியர் குறித்த தகவலைத் தெரிவித்தனர். டெல்லிக்கு வந்து சேர்ந்த அந்த இந்தியரை இந்தியக் குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், ஹெட்லி, ராணா அலுவலங்கள் மூலமாக குடியேற்ற சேவையை பெற்றதைத் தவிர அவர் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. ஹெட்லி, ராணா குறித்து அவருக்குத் தெரியாது எனத் தெரிய வந்ததால் அவரை சொந்த மாநிலமான குஜராத் திரும்பிச் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
சம்பந்தப்பட்ட இந்தியர் குடியுரிமை அதிகாரிகளிடம் கூறுகையில், ஹெட்லி, ராணாவின் தீவிரவாதத் தொடர்புகள் குறித்தோ, அவர்கள் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. பெரும் பணம் கொடுத்து விசா உள்ளிட்ட ஆவணங்களை நான் மும்பை அலுவலகத்திலிருந்து பெற்றேன்.
அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடா செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் நான் அமெரிக்கா வந்ததாக கூறி அமெரிக்க அதிகாரிகள் என்னை நாடு கடத்தி விட்டனர் என்றார் அவர்.
அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications