சொத்துக் கணக்கு: அனிதா மனுவை தள்ளுபடி செய்ய அதிமுக கோரிக்கை!

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, அதிமுக சார்பில் வக்கீல்கள் யு.எஸ்.சேகர் மற்றும் அதிமுக வக்கீல்கள் தேர்தல் அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில், திமுக சார்பில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னுடைய சொத்துக்களை முழுமையாக காட்டவில்லை. அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 வழக்குகள் உள்ளன. இவை வாக்காளர் பட்டியல் மோசடி செய்த வழக்குகள் ஆகும். இதை அவரது மனுவில் காட்டவில்லை.
அவரது டாடா சுமோ காரை வேட்பு மனுவில் காட்டவில்லை. குதிரைமொழி பஞ்சாயத்தில் உள்ள 2.42 ஏக்கர் நிலத்தில் 6ல் ஒரு பங்கு அனிதா ராதா கிருஷ்ணனுக்குரியது.
புன்னக்காயல் 11.78 ஏக்கர் இடம் அனிதா ராதாகிருஷ்ணன் மனைவி பெயரில் உள்ளது. இதையெல்லாம் சொத்துக் கணக்கில் அவர் காட்டவில்லை.
இதுபோக அனிதா ராதாகிருஷ்ணனிடம் உள்ள துப்பாக்கிகளையும் கணக்கில் காட்டவில்லை.
மேலும் மதுரையில் உள்ள பல சொத்துக்களையும் கணக்கில் காட்டவில்லை. இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 30ன் படி அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்யலாம். ஆனால் எங்கள் கோரிக்கை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் நாங்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் செய்ய உள்ளோம் என்றனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications