நக்ஸல்-மம்தா தொடர்பு-ஆதாரம் தந்த இடதுசாரிகள்
டெல்லி: மாவேயிஸ்டுகளுடன் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுக்கு
நெருங்கிய தொடர்பிருப்பதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆவணங்கள், சிடிக்கள் உள்ளடக்கியஆதாரங்களை பிரதமர் மன்மேகன் சிங்கிடம் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒப்படைத்தனர்.
பிரதமரை சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், வாசுதேவ் ஆச்சார்யா உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் சந்தித்து மேற்கு வங்கத்தில் மாவேயிஸ்டுகளுடன் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் முக்கிய
தலைவர்களுக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் அவர்கள் தான் அவ்வப்போது வன்முறையைத் தூண்டுவிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
ஆதாரங்களையும் தந்த அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி, நாங்கள் தந்த ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எப்படியாவது ஆட்சியை கைப்பற்றத் துடிக்கிறார். இதனால் மாவேயிஸ்டுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்.
அவர்களுடன் நெருக்கமாக இருந்து கெண்டு தங்களது அரசியல் தளத்தை வலுப்படுத்திக் கொள்ள திரிணமூல் காங்கிரஸ் முயல்கிறது.
மாவேயிஸ்டுகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரதமர் எங்களிடம் கவலை தெரிவித்தார். ஆனால் அவரது அமைச்சரவையில்
அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலரே
மாவோயிஸ்டுகளுடன் வெளிப்படையாக நெருங்கிய உறவு வைத்துள்ளனர்.
அப்படிப்பட்டோர் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. இதுகுறித்து பிரதமர் உடனடியாக
முடிவெடுக்க வேண்டும் என்றார் .
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் இதனால் அது குறித்து விசாரிக்க மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் மம்தா மத்திய அரசுக்கு நெருக்கடி தந்தார். அதற்குப் பணிந்து சமீபத்தில் மத்திய அரசு உயர்நிலை குழு ஒன்றை அனுப்பி வைத்தது.
இந் நிலையில் அதற்கு பதிலடியாக மம்தா-நக்ஸல்கள் தொடர்பு குறித்து ஆவணங்களைத் தந்துள்ளனர்
இடதுசாரிகள்.
மம்தா மறுப்பு:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய மம்தா, தனக்கே தனது கட்சியினருக்கோ மாவோயிஸ்டுகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும். அவர்களது கொள்கைகள் தனக்கு ஏற்புடையவை அல்ல என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications