திருவாங்கூர் வங்கி ஏடிஎம் கோளாறால் ஐயப்ப பக்தர்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: தமிழக-கேரள எல்லையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கி ஏடிஎம் அடிக்கடி பழுதாவதால் ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூர் உள்ளது. இவ் வங்கியின் வாயிலில் உள்ள ஏடிஎம் மையத்தில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.

ஆனால், இந்த இயந்திரத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவது, பண இருப்பு பற்றாக்குறை போன்றக் காரணங்களால் ஏடிஎம் மையம் அடிக்கடி மூடப்பட்டு விடுகிறது.

தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில ஐயப்ப பக்தர்கள் இந்த வழியே செல்லும்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க நம்பி வந்து ஏமாந்து செல்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் வங்கியில் சென்று கூறினாலும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவதால் பொதுமக்கள், சம்பளம் பெறும் அரசு துறையினர், ஐயப்ப பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+