சென்னை ஏர்போர்ட்டில் வெடிகுண்டு பீதி- நள்ளிரவில் பதட்டம்
சென்னை: வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலால் நள்ளிரவில் ஒன்றரை மணிநேரம் சென்னை விமான நிலையம் பதட்டத்துடன் காணப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அண்ணா பன்னாட்டு முனையம் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் ஒரு 'மர்ம பை' கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சிலர் கூறியதால் திடீர் பீதி ஏற்பட்டது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் பன்னாட்டு விமானங்கள் போக்குவரத்து அதிகம் என்பதால், அங்கு கூட்டமும் அதிகமாக இருந்தது. வெடிகுண்டு பீதியால் மக்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஒடினர்.
இதற்கிடையே குப்பைத் தொட்டியில் கிடந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் வெளியே எடுத்தனர். அதை கவனமுடன் பிரித்து பார்த்த போது அதில், எதுவுமில்லை. யாரோ அதை வீசி எறிந்து சென்றிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் விமான நிலைய வளாகம் நள்ளிரவில் சுமார் ஒன்றரை மணி நேரம் பீதியுடன் காணப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications