அத்துமீறிய 6 இலங்கை மீனவர்கள் கைது
இராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
காரைக்கால் கடல் பகுதியில், இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் சென்று நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடலில் மீன்பிடித்த 6 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த சனத்பிவாத்தோ (40), பிரபாத்(30), சனத்(23), திலான்(24), ரூபான்(25), உபாலி(30) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தும் தெரியவந்தது.
பிடிபட்ட 6 பேரும் இந்திய கடலோர காவல் படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, 6 பேர் மீதும் மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான அனைவரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி 6 பேரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கமாக இந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை மடக்கும் இந்திய கடலோர காவல்படையினர் மண்டபம் காவல் படை முகாமில் ஒப்படைப்பது உண்டு.
பின்னர் மத்திய-மாநில அரசு உத்தரவுப்படி சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிங்கள மீனவர்கள் 6 பேர் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு
இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications