டெல்லியில் ஜாகையை மாற்றுகிறது காங்கிரஸ்

மோதிலால் நேரு வழங்கிய அலகாபாத் ஆனந்த பவனில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் எண் 7, ஜன்தர் மந்தர் சாலையில் தான் நீண்ட நாட்களாக இயங்கி வந்தது. அதன் பிறகு ராஜேந்திர பிரசாத் சாலைக்கு மாற்றப்பட்டது. 1977க்கு பின் இந்த இடத்திலிருந்து அக்பர் சாலைக்கு ஜாகை மாறியது.
எண் 24, அக்பர் சாலை வீடு 1977ல் ஜி.கே மூப்பனாருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அவர் வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டார். அப்போதில் இருந்து காங்கிரஸ் தலைமையகம் இங்கு தான் செயல்பட்டுக்கொண்டிருந்தது. 1990களில் கட்சியின் அலுவலகத்துக்காகத் தான் ராஜிவ் காந்தி பவன் கட்டப்பட்டது.
ஆனால் 24 அக்பர் சாலையே நிலைத்துவிட்டது. இந்த கட்டடம் கட்சி அலுவலகத்துக்கு போதுமானதாக இல்லை என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். கட்டடத்தை விரிவு படுத்தும் திட்டமும் கோர்ட் உத்தரவால் தடைபட்டது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் அலுவலகங்களை லுட்யான்ஸ் பகுதியில் இருந்து மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தீனதயாள் மார்க் சாலையில் உள்ள இடத்தை காங்கிரஸ் தேர்வு செய்தது. ஆனால், காங்கிரசாருக்கு இதில் ஒரு தர்மசங்கடம். 'அக்பர் சாலை என்று சொல்லும்போது ஒரு மதச்சார்பற்ற ஃபீல் இருந்தது. இப்போது, தீனதயாள் மார்க் என்பது கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது' என்று அவர்கள் கூறிகின்றனர்.
ஜனசங்கத்தின் கொள்யையை உருவாக்கியவர் தீனதயாள் உபாத்தியாயா. கட்சி 125வது ஆண்டுவிழாவை கொண்டாட இருக்கும் நேரத்தில், அனைத்து ஆவணங்கள்ஸ பேனர்கள், லெட்டர் பேடுகள் எல்லாவற்றிலும் தீனதயாள் உபாத்தியாயாவின் பெயர் வருவதை காங்கரஸ் தலைமை ரசிக்கவில்லை.
எனவே, அலுவலக வாசலை கோட்லா சாலையில் அமைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அலுவலகம் தீன தயாள் சாலையில் அமைந்தாலும், அதிகாரப்பூர்வமாக கோட்லா சாலை தான் பயன்படுத்தப்படும்.
புதிய கட்டிடத்துக்கு சோனியா காந்தி 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். 1985ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தான் ராஜீவ் காந்தி அரசியல் பொறுப்புக்கு வந்தார். எனவே 28ம் தேதியை அடிக்கல் நாட்ட தேர்வு செய்துள்ளனர். ஒரு வருடத்தில் அலுவலகத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications